Haiti-வில் பயங்கர நிலநடுக்கம் பலர் பலி 1000-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

கரீபியன் தீவில் இருக்கும் Haiti-வில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

கரீபியன் தீவான Haiti-வில் இருக்கும் தலைநகர் Port-au-Prince-வுக்கு மேற்கே 7.5 மைல் தொலைவிலும், Petit Trou de நகரில் இருந்து 5 மைல் தொலைவிலும் பயங்கரமான நிலநடுக்கம்  ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் 6 மைல் ஆழம் அளவிற்கு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2-ஆக பதிவாகியிருப்பதாக US Geological Survey (USGS) அமெரிக்க புவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த நிலநடுக்கம் காரணமாக, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்ற நிலநடுக்கம்(ரிக்டர் அளவுகோலி 7.0 ஆக பதிவு) ஏற்பட்டதால், அதில் இருந்து மீள்வதற்கே பல வருடங்கள் ஆகிவிட்டது.

இப்போது மீண்டும் இது போன்ற நிலநடுக்கத்தால் அங்கிருக்கும் மக்கள் கடும் பயத்துடன் உள்ளனர்.

தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த நிலநடுக்கத்தின் காரணமாக 1000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும், பலர் பலியாகியிருப்பதாகவும் அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.

ஆனால், இது குறித்து இன்னும் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால், சமூகவலைத்தளங்களில் இந்த நிலநடுக்கத்தால், அங்கிருக்கும் வீடுகள் தரைமட்டமாகியும், சில இடுபாடுகளுக்கிடையில் சிக்கி கிடப்பதையும் பார்க்க முடிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *