இலங்கையில் டிசம்பர் மாதமளவில் 22ஆயிரம் கொவிட் மரணங்கள் பதிவாகும் அபாயம்!

எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் இலங்கையில் சுமார் 22000 கோவிட் மரணங்கள் பதிவாகக் கூடிய அபாய நிலைமை காணப்படுவதாக வொஷிங்டன் பல்கலைக்கழகத்தின் இணை நிறுவனமான Institute for Health Metrics and Evaluation (IHME) நிறுவனம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டில் நாளுக்கு நாள் கோவிட் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் நிலையில் இந்த எதிர்வு கூறல் வெளியிடப்பட்டுள்ளது. கோவிட்19 பெருந்தொற்று தொடர்பிலான எதிர்வுகூறல்களை வெளியிடும் நிறுவனங்களில் IHME நிறுவனம் முன்னணி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது நாட்டில் தினசரி 100 மரணங்கள் பதிவாகி வருவதாகவும் நிலைமை மோசமானால் ஒக்ரோபர் மாதமளவில் நாள் ஒன்றுக்கு 350 மரணங்கள் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்பொழுது மொத்த கோவிட் மரணங்கள் 5000 காணப்படுகின்ற நிலையில் இன்னும் நான்கு மாதங்களில் அதாவது டிசம்பர் மாதத்தில் 12600 கோவிட் மரணங்கள் பதிவாகும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

கோவிட் பெருந்தொற்று நிலைமை மோசமடைந்தால் இந்த மரண எண்ணிக்கை 22000 மாக உயர்வடையும் என IHME நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *