கம்பஹாவில் சிகிச்சை இன்றி தவிக்கும் 7ஆயிரம் கொவிட் நோயாளர்கள்!

2021 ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி வரை கம்பஹா மாவட்டத்தினுள் 12,555 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று (10) இடம்பெற்ற கம்பஹா மாவட்ட கொவிட் குழு கூட்டத்தின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், 7,003 பேர் தொடர்ந்தும் வீடுகளில் உள்ளதாக இதன் போது தெ​ரிவிக்கப்பட்டுள்ளது.

இனங்காணப்பட்டுள்ள 12,555 தொற்றாளர்களில் இதுவரை 4,046 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,506 பேர் வீடுகளில் தடுத்து வைத்து சிகிச்சை அளிக்கப்படுவதாக இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 2020 ஒக்டோபர் மாதம் தொடக்கம் 2021 ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி வரை கம்பஹா மாவட்டத்தில் 1,033 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ள நிலையில் அதில் 55 சதவீதமானவர்கள் ஆண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவான மரணங்களில் 135 மரணங்கள் நீர்க்கொழும்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பதிவாகி உள்ளதாக இந்த கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *