திருமணம் முடித்த தம்பதிகள் மூன்று நாட்களுக்கு இயற்கை உபாதை கழிக்க கூடாதாம்!

திருமணம் முடிந்த தம்பதிகள் அடுத்த மூன்று நாட்களுக்கு இயற்கை உபாதை கழிக்க கூடாது என்ற சட்டம் போட்டது ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

உலகம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் தங்களுக்கென ஒரு தனி கோட்பாடு, கொள்கை, சமூக பழக்க வழக்கங்கள் என வாழ்ந்து வருகின்றனர். மனித இனத்திற்கு பொதுவான ஒன்றாக இருந்தாலும், சில இடங்களில், சில மனிதர்களால் பின்பற்றப்படும் பழக்கவழக்கங்கள் சற்று வித்தியாசமானதாகவும், முரண்பட்டதாகவும் உள்ளது.

அந்த வகையில், வினோதமான சமூக பழக்கவழங்களை கடைப்பிடிவர்கள் தான் இந்தோனேசியா நாட்டு மக்கள். ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களிடையே இந்த பழக்கவழக்கம் பின்பற்றப்பட்டுவருகிறது.

அதவாது, புதிதாக திருமணம் முடிந்த தம்பதியினர், திருமணம் முடிந்த அடுத்த மூன்று நாட்களுக்கு பாத்ரூம் கழிக்க கூடாது. ஒருவேளை அவர்கள் இதை மீறும் பட்சத்தில், அவர்களுக்கு பிறகும் குழந்தை இறந்து பிறக்கலாம், அல்லது கணவன் மனைவி இருவரில் யாராவது ஒருவர் இறந்துவிடலாம் என அவர்களால் நம்பப்படுகிறது.

அதனால், திருமணம் முடிந்த அடுத்த மூன்று நாட்களுக்கு, குறைந்த அளவிலானா உணவு, நீர் போன்றவற்றை மட்டுமே எடுத்துக்கொள்கின்றனர்.

மேலும், இவ்வாறு 3 நாட்கள் அவர்கள் வெற்றிகரமாக முடித்துவிட்டால், அவர்களது வாழ்க்கையில், வாழ்க்கை துணைக்குள் ஒரு பெரிய பிணைப்பு உண்டாகும் எனவும் அவர்கள் நம்புகின்றனர்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *