இலங்கை பயணிகளுக்கு பிரான்ஸ் நாட்டிற்குள் நுழைய அனுமதி!

பிரான்ஸ், அதன் நுழைவு நிலைகளில், இலங்கையை செம்மஞ்சள் மண்டலத்தில் வகைப்படுத்தி, சுகாதார நெறிமுறைகளுக்கு உட்பட்டு, இலங்கையர்கள் தமது நாட்டுக்கு வர முடியும் என்று அறிவித்துள்ளது.

பிரான்ஸ் தூதரக இணையதளத்தின்படி, இலங்கை செம்மஞ்சள் மண்டலத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

ஃபைசர், மாடர்னா, எஸ்ட்ராசெனெகா மற்றும் கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகளை முழுமையாக செலுத்திக்கொண்டவர்கள், இரண்டாவது அளவை செலுத்திய இரண்டு வாரங்களுக்குப் பின்னர் நாட்டுக்குள் நுழையலாம்.

மேலும், ஜோன்சன் அன்ட் ஜோன்சன் தடுப்பூசி மூலம் தடுப்பூசி போடப்பட்டவர்கள் தங்கள் இரண்டாவது அளவுக்கு பின்னர் நான்கு வாரங்கள் கழித்து நாட்டுக்குள் பிரவேசிக்கலாம்.

எனினும் ஜோன்சன் அன்ட் ஜோன்சன் தடுப்பூசி இன்னும் இலங்கையில் அவசர பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்படவில்லை.

முழுமையாக தடுப்பூசி போடப்படாதவர்கள் பி.சி.ஆர் அல்லது என்டிஜென் சோதனையை 48 மணி நேரத்திற்கும் குறைவாக காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும்,

வருகையில் ஆன்டிஜென் சோதனைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று பிரான்ஸ் தூதரக இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *