அதிகரிக்கும் கொரோனா பரவல் இரவு நேர ஊரடங்கு அமுல்!

அசாமில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து அங்கு இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2ம் அலையின் தாக்கம் குறைந்து வருகின்ற போதிலும் அசாமில் நோய் பாதிப்பு விகிதம் அதிகரித்துள்ளது. அங்கு புதிதாக 1120 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 1,066 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். நோய் பாதிப்புக்கு ஒரேநாளில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். 9,749 பேர்மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை இதுவரை 5,58,720 பேர் ஆகும். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  5,404 பேர் ஆகும். இதை அடுத்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக 2 நாட்களுக்கு பகுதி நேர ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அசாம் மாநில அரசு தெரிவித்துள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்:

  • சந்தைகள், கடைகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், உணவு விடுதிகள் உள்ளிட்டவை மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும்.

 * மாவட்டங்களுக்கு இடையேயும் மாவட்டங்களுக்கு இடையேயும் மாலையில் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்படும். ஆனால் சரக்கு வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.

  • பொது இடங்களில் 10 பேருக்கு மேல் கூடுவதை தவிர்க்க வேண்டும்.
  • பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம், சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்.  
  • சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்து விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.  
  • கொரோனா பரவல் குறைவதற்கு ஏற்ப மாவட்டங்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *