சிறுவர்கள் மத்தியில் கொவிட் அதிகரிப்பதால் நிலைமை சரியில்லை மருத்துவர் தெரிவிப்பு!

கொழும்பு றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில், கோவிட் 19 தொற்றிய சிறுவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள விடுதிகள் அனைத்தும் தற்போது நிறைந்துள்ளதாக அந்த வைத்தியசாலையின் சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட மருத்துவர் நிலன் கித்துல்வத்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“சுருக்கமாக கூறுவது என்றால், ஏற்பட்டு வரும் நிலைமை சரியில்லை. சிறுவர்கள் மத்தியில் மிக வேகமாக கோவிட் வைரஸ் பரவி வருகிறது. றிஜவே சிறுவர் வைத்தியசாலையில் கோவிட்டுக்காக ஒதுக்கப்பட்ட அனைத்து விடுதிகளும் நிரம்பி வருகின்றன” எனக் கூறியுள்ளார்.

அத்துடன் ராஜகிரிய பிரதேசத்தில் மேலும் இரண்டு விடுதியை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் காலை வரை 150 சிறுவர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் சுமார் 45 ஆயிரம் சிறுவர்களுக்கு கொரோனா தொற்றியுள்ளது. இவர்களில் 20 ஆயிரம் பேர் 10 வயதுக்கும் குறைவான சிறுவர்கள். கடுமையான காய்ச்சல் இருந்தால், அந்த பிள்ளை சாப்பிட முடியாது நிலையில், இருந்தால், வாந்தி, வயிற்றோட்டம் உட்பட நோய் அறிகுறிகள் இருந்தால், எந்த நேரத்திலும் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல முடியும்.

வைத்தியசாலையில் இடமில்லை என்றாலும் குழப்பமடைய தேவையில்லை. எந்த வைத்தியசாலையும் வரும் சிறுவர்களை திருப்பி அனுப்புவதில்லை எனவும் நிலன் கித்துல்வத்த குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *