கொழும்பில் 30 வீதமான மக்களுக்கு டெல்டா வைரஸ் பாதிப்பு!

கொழும்பு மாவட்டத்தில்   அடையாளங் காணப்பட்ட   கொரோனா தொற்றாளர்களுள்  30 வீதமானவர்கள் டெல்டா பரவலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக  மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு நகரில் நாளாந்தம்  500 முதல் 600 வரையான தொற்றாளர்கள் பதிவு செய்யப்படுகின்ற நிலையில்  டெல்டா மாறுபாட்டுக்குள்ளானவர்கள் 30வீதமானவார்கள்  என கொழும்பு மாநகரசபையின்பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

இதேவேளை தடுப்பூசி திட்டத்தை விரைவு படுத்துவதன் ஊடாக தொற்று பரவலைகட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் 30 வயதுக்கு  மேற்பட்ட 75 வீதமானவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாநகரசபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி  மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பொலிஸாரின் ஒத்துழைப்புடன் வீட்டுக்கு வீடு  தடுப்பூசி  வேலைத்திட்டம்  விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

இதனூடாக தடுப்பூசி பெறாதவர்கள் அடையாளங் காணப்பட்டு அவர்களுக்கு தடுப்பூசியினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கொழும்பு மாநகரசபையின் பிரதம வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *