கொரோனாவால் ஒவ்வொரு 2 நிமிடத்திற்கும் ஒருவர் உயிரிழப்பு!

மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஈரானில் ஒவ்வொரு 2 நிமிடத்திற்கும் ஒருவர் உயிரிழப்பதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானில் தினசரி கொரோனா இறப்பு எண்ணிக்கை திங்கட்கிழமை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

அதாவது, ஈரானில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 588 பேர் பலியாகியுள்ளனர், இதன் மூலம் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 94,603 ஆக அதிகரித்துள்ளது.

  கடந்த 24 மணிநேரத்தில் புதிததாக 40,808 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது, இதன் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 41,99,537 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் தொற்று அதிகரிப்புக்கு தீவிரமாக பரவும் டெல்டா மாறுபாடு தான் காரணம் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், கொரோனா தொற்று அதிகரிப்புக்கு மோசமான சமூக இடைவெளி காரணம் என அதிகாரிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

83 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஈரானில், வெறும் 4 சதவிகித பேருக்கு மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய கொரோனா நோயாளிகளால் பல நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் ஒருவர் தொற்றால் பாதிக்கப்படுவதாகவும், ஒவ்வொரு 2 நிமிடத்திற்கும் ஒருவர் உயிரிழப்பதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையே, ஈரானின் 31 மாகாணங்களில் பெரும்பாலானவை அதிக ஆபத்துள்ள சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *