ஆபத்தான கட்டத்தில் இலங்கை எச்சரிக்கும் இராணுவ தளபதி!

எதிர்வரும் மாதம் மிகவும் தீர்மானமிக்கதென்பதனால் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள சுகாதார பரிந்துரைகளை கடுமையாக பின்பற்றுமாறு கொவிட் தடுப்பு தேசிய செயற்பாட்டு நிலையத்தின் பிரதானி இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்றிற்கு எதிராக தடுப்பூசி பெறாதவர்கள் இருந்தால் முடிந்த அளவு விரைவில் அதனை பெற்றுக் கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மூன்றாவது தடுப்பூசியும் விரைவில் வழங்கப்படலாம். தற்போது அதிகமாக உயிரிழப்பவர்கள் 60 வயதிற்கு மேற்பட்ட தடுப்பூசி பெறாதவர்கள் என தெரியவந்துள்ளது.

இதுவரையில் இராணுவத்தினரால் கொழும்பு விகாரமஹா தேவி பகுதியில் எஸ்ட்ரா செனேக்காவின் இராண்டாவது தடுப்பூசியும், சைனோபாம் முதலாவது மற்றும் இரண்டாவது வழங்கப்படுகின்றது.

இதனால் மக்கள் முடிந்த அளவு வேகமாக தடுப்பூசி நிலையங்களுக்கு சென்று தடுப்பூசி பெற்றுக் கொள்ளுங்கள். அதன்போதும் சுகாதார பிரிவு வழங்கும் ஆலோசனைகளை உரிய முறையில் பின்பற்றமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

எதிர்வரும் மாதம் நாட்டு மக்களுக்கு தீர்மானமிக்க மாதமாக இருக்கலாம் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *