தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி!

சர்வதேச சந்தையில் கடந்த வாரத்தில் தங்கம் விலையானதுஆரம்பத்தில் வழக்கம்போல அதிகரிக்க தொடங்கியிருந்தாலும், வார இறுதியில் பலத்த சரிவினைக் கண்டது.

ஒரு அவுன்ஸ் தங்கம் விலை வார இறுதியில் 1763.50 டாலர்களுக்கு அருகில் வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது.

தங்கம் விலையானது நிபுணர்கள் சொல்வதைபோல் உச்சத்தினை மீண்டும் தொட்டு விடுமோ? என்ற அச்சத்தினை ஏற்படுத்திய நிலையில், எதிர்பாராத விதமாக தங்கம் விலையானது 1800 டாலர்களையும் உடைத்துள்ளது.

தங்கம் விலை சரிவு இன்னும் இப்படியே தொடருமா? அப்படி குறைந்தால் எவ்வளவு குறையும்? கடந்த வாரம் தங்கம் விலை நிலவரம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

கடந்த வாரம் தங்கம் விலையானது ஆரம்பத்தில் ஏற்றம் காணுவது போல இருந்தாலும், வாரத்தின் பிற்பாதியில் தங்கம் விலையானது பலத்த சரிவினைக் கண்டுள்ளது.

அமெரிக்காவின் வேலை வாய்ப்பு சந்தையானது கடந்த வாரத்தில் சந்தைக்கு சாதகமாக வந்த நிலையில், அது பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளதையே சுட்டிக் காட்டுகின்றது.

இது டாலரின் மதிப்பு ஏற்றம் காண வழிவகுத்தது. இதனால் பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது குறைய முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

தங்கம் விலையானது அதன் முக்கிய சப்போர்ட் லெவலான 1800 டாலர்களை உடைத்துள்ள நிலையில், அடுத்த முக்கிய சப்போர்ட் லெவாலன 1780 டாலர்களையும் உடைத்துக் காட்டியுள்ளது.

அதாவது கடந்த வாரத்தில் 1759.50 டாலர்கள் வரையில் தங்கம் விலை குறைந்தது. எனினும் வாரத்தின் முடிவில் 1763.50 டாலர்களாக முடிவுற்றது.

ஆக தங்கம் விலையானது சற்று குறையலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

ஒரு அவுன்ஸ் தங்கம் விலை கடந்த திங்கட்கிழமையன்று 1817 டாலர்களாக தொடங்கிய நிலையில், அதே வாரத்தில புதன்கிழமையன்று அதிகபட்ச விலையாக 1835.90 டாலர்கள் வரையில் சென்றது.

வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமையன்று வாரத்தின் குறைந்தபட்ச விலையான 1759.50 டாலர்கள் வரையில் தங்கத்தின் விலை சென்றது. எனினும் அன்றைய தினம் முடிவில் 1763.50 டாலர்கள் வரையில் சென்றது.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை2021-08-07 அன்று 120,000 வரையில் விற்பனையாகி உள்ளது.

அத்துடன் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூபா.110 000 வரையில் விற்பனையாகி உள்ளமை கூறத்தக்கது.

வெள்ளியின் விலை நிலவரம்

வெள்ளியின் விலையும் கடந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்தே ஏற்றத்தினை கண்ட நிலையில், பிற்பாதியில் பலத்த சரிவினைக் கண்டது.

கடந்த திங்கட்கிழமையன்று 25.625 டாலர்களாக தொடங்கிய நிலையில், புதன்கிழமையன்று அதிகபட்சமாக 25.655 டாலர்கள் வரையிலும் சென்றது.

எனினும் வெள்ளிக்கிழமையன்று 24.205 டாலர்கள் வரையில் சென்று, முடிவில் 24.332 டாலர்களாகவும் முடிவடைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *