செல்லப் பிராணிகளைத் திருடினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை!

பிரித்தானியாவில் செல்லப்பிராணிகள் திருட்டை கட்டுக்குள் கொண்டுவரும் விதமாக புதிய கிரிமினல் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

பிரித்தானியாவில் செல்லப் பிராணிகளைத் திருடுபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படவுள்ளது.

நாய்கள், பூனைகள் என செல்லப்பிராணிகளுக்கும் உணர்ச்சிகள் உள்ளன, அமுல்படுத்தப்படவுள்ள புதிய சட்டத்தின் கீழ் அவற்றை திருடுவதும் கடத்துவதும் தண்டனைக்குரிய கிரிமினல் குற்றம் என கூறப்படுகிறது.

பிரித்தானியாவில் கோவிட் காரணமாக முதல்முறையாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில், செல்லப்பிராணிகள் அதிகளவில் விற்பனையானது.

அதனால் வளர்ப்பு நாய்களின் தேவை அதிரித்ததைத் தொடர்ந்து, அதன் விலை இரு மடங்காக உயர்ந்தது. இதை திருடர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டனர்.

கடந்த 2 ஆண்டுகளாக செல்லப்பிராணிகள் திருட்டு அதிகரிப்பதாக சமீபத்தில் அறிக்கை வெளியானது. குறிப்பாக விலை உயர்ந்த நாய்கள் அதிகள் திருடப்பட்டு கடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், புதிய Pet Abduction சட்டம் கொண்டுவர அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. இது குறித்து அரசாங்கத்தின் செல்லப்பிராணி திருட்டு பணிக்குழு அதன் அறிக்கையை இறுதி செய்து வருகிறது, இது வரும் வாரங்களில் வெளியிடப்படும்.

பணிக்குழுவினர் இது தொடர்பாக செல்லப்பிராணிகள் மற்றும் வீட்டு விலங்குகளுக்கான தொண்டு நிறுவனங்கள், வளர்ப்பவர்கள் மற்றும் காவல்துறையினரிடம் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *