நாளை முதல் கொரோனா நடைமுறைகளை மீறினால் அபராதம்!

பிரான்சில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கி, நாளை முதல் புதிய கொரோனா கட்டுப்பாடு விதி நடைமுறைக்கு வரவுள்ளது.

கொரோனாவின் நான்காவது அலையில் சிக்கியிருக்கும் பிரான்ஸ், மக்கள் தடுப்பூசி போடும் படி அறிவுறுத்தி வருகிறது. இதற்கிடையில் நாட்டில் வரும் 9-ஆம் திகதி முதல் சுகாதார பாஸ் கட்டாயம் என்ற கட்டுப்பாட்டு விதிமுறை நடைமுறைக்கு வருகிறது.

குறிப்பாக, இந்த சுகாதார பாஸ் கபேக்கள், உணவகங்கள், திரையரங்குகள், இரயில்கள் மற்றும் பேருந்துகளில் பயணிக்கவும் கட்டாயமாகின்றது.

அப்படி இந்த பாஸ் இல்லாமல் பயணித்தாலோ அல்லது உணவகங்களில் சிக்கினாலோ 135 யூரோ அபராதமாக விதிக்கப்படும். இந்நிலையில் சுகாதார பாஸ் இல்லாதவர்கள் இரயிலில் பயணிப்பது குறித்து SNCF தெளிவான விளக்கம் கொடுத்துள்ளது.

அதில், இரயில்நிலைய நடை மேடையில் அல்லது இரயில்களில் வைத்து அதிகாரிகள் உங்களை எப்போதுவேண்டுமென்றாலும் சோதனையிடுவார்கள்.

சுகாதார பாஸ் கட்டாயம். வரும் 9 ஆம் திகதியில் இருந்து செப்டம்பர் 12 திகதி வரை தொடருந்து பயணங்களுக்கான முன்பதிவு செய்தவர்கள், தங்களது பயணச் சிட்டையை எவ்வித கட்டணங்களும் இன்றி மாற்றிக்கொள்ளலாம். இரத்துச் செய்யலாம். ஆனால், சுகாதார பாஸ் இல்லாமல் இரயிலில் பயணிக்க வாய்ப்பே இல்லை என தெரிவித்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *