அமெரிக்காவில் கொரோனா மீண்டும் தீவிரமானதால் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது!

அமெரிக்காவில் கொரோனா மீண்டும் தீவிரமாக பரவிவரும் நிலையில் அந்நாட்டில் உள்ள முக்கிய நிறுவங்கள் தங்கள் பணியாளர்களுக்கு தடுப்பூசியை கட்டாயமாக்கியுள்ளார். அமெரிக்காவில் டெல்டா வகை கிருமியின் பரவல் அதிகரித்து வருவதால் நோய் தொற்றுபரவல் உயர்ந்து வருகிறது. இதனையடுத்து அமெரிக்க நிறுவங்கள் தங்கள் ஊழியர்களுக்கு தடுப்பூசியை கட்டாயமாக்கி இருகின்றனர்.

இந்நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் அலுவலகத்திற்கு வந்த ஊழியர்கள் 3 பேரை CNN செய்தி நிறுவனம் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைவர் ஜெப்சக்கர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் அலுவலகத்திற்கு வந்து பிற ஊழியர்களிடம் சேர்ந்து வேலை செய்வது ஆபத்தானது என்றும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் பிரபல விமான போக்குவரத்து நிறுவனமாக United Airlines தனது பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசியை கட்டாயமாக்கியுள்ளது. இந்த குழுமத்தில் பணியாற்றும் 67,000 ஊழியர்களும் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான ஆவணங்களை ஒப்படைக்குமாறு United Airlines உத்தரவிட்டுள்ளது.

பிரபல ஆன்லைன் நிறுவனமான அமேசான் அமெரிக்க பணியாளர்களை அடுத்த ஆண்டுவரை அலுவலகங்களுக்கு நேரில் வர வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.  தொற்று தீவிரமாக பரவி வருவதால் ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலைபார்க்கும் கொள்கை முடிவை கூகிள் நிறுவனம் அக்டோபர் 18-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. பேஸ்புக் நிறுவனமும் தமது நிறுவன ஊழியர்கள் அனைவருக்கு தடுப்பூசியை கட்டாயமாக்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *