நீதியான விசாரணைகள் வேண்டும் சபையில் ரிஷாத் தெரிவிப்பு!

இசாலினியின் மரணம் எனது குடும்பத்திற்கு துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது
மைத்துனரும், குடும்பமும் சிறையில் உள்ளனர்
இதற்கு நீதியான விசாரணைகள் வேண்டும் என ரிசாத் பதியூதீன் சபையில் தெரிவித்துள்ளார்.

விசாரணயில் உள்ள வழக்கு குறித்த சம்பவம் குறித்து பேச முடியாது என ஆளும் கட்சி எதிர்ப்பு தெரிவித்தனர்

இசாலினியின் மரணம் குறித்து நீதியான, சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதீன் தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதீன்,

இசாலியினி சம்பவம் குறித்து இன்று பலர் பலவிதமாக பேசுகின்றனர். அந்த சகோதரியினி மரணம் எங்களையும் துன்படையச் செய்துள்ளது. அந்த சகோதரியை தரகவே அழைத்துவந்தார். தாயோ, தந்தையோ வரவில்லை. ஏழுக்கு ஆறு அளவிலான அறையில் தங்கவைத்திருந்தோம். அதனுடன் மலசலகூடமும் அவருக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. கடந்த 10 வருடங்களாக இந்த அறையில் தான் வேலை செய்தவர்கள் தங்கியிருந்தனர். சம்பவ தினத்தில் எனது மாமனாரும் மாமியும் உறங்கிக் கொண்டிருந்தனர். சத்தம் கேட்டு வந்து தீயை அனைக்க முயற்சித்தனர். 07.03இற்கு அம்பியூலன்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 7.33 வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதியப்பட்டுள்ளது. எமது ரத்த உறவுக்கு இப்படி நடந்தால் எப்படி நடந்திருக்குமோ அப்படியே இசாலினி விடயத்திலும் நடந்துகொண்டோம்.

மனைவி உடனடியாக வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். வைத்தியர்கள் அந்த சகோதரியைக் காப்பாற்ற முழு முயற்சி எடுத்துள்ளனர். எனது குடும்பத்தினர் முழுப் பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ தினத்திலேயே இசாலினியின் குடும்பத்தினருக்கு வாகனத்தை ஒழுங்கு செய்துகொடுத்துள்ளனர். பிளாஸ்டிக் சேர்ஜரி செய்வதற்கு 7 முதல் 10 லட்சம் தேவை என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். உயிரைக் காப்பாற்றுமாறு மனைவி வைத்தியர்களிடம் கூறியிருக்கிறார். இந்தச் சம்பவம் நடக்கும் போது நான் சிறை வைக்கப்பட்டிருந்தனர். இந்த பிள்ளை வேலைக்கு சேர்க்கும் போது முகவர் 17 வயது என்று கூறியிருந்தார். அந்தப் பிள்ளையும் பார்ப்பதற்கு 17, 18 வயது மாதிரியே இருக்கிறது. ஊடக விபச்சாரம் செய்யும் ஊடகங்கள் பொய் கூறுகின்றன. ஊடகங்கள் பிழையான தகவல்களை சொல்லியிருப்பதைப் பார்த்தேன். மிக வேதனைப் படுகிறேன். எனது மனைவி பண்பானவர். பிள்ளையை அனுப்பிய இரண்டு தினங்களில் 40 ஆயிரம் அனுப்பியுள்ளார். ஏழு மாதங்களில் இரண்டு லட்சம் அனுப்பியிருந்தார். அந்தத் தாய்க்கும் வேதனை இருக்கும். அந்த குடும்பத்திற்கும் வேதனை இருக்கும். அந்த வேதனையில் நாம் பங்குகொள்கிறோம். அந்தக் குடும்பத்தை சிலர் பிழையான வழிநடத்துகின்றனர். ஆனால் இந்த ஊடகங்கள் பிழையான தகவல்களை வழங்குகின்றனர். இந்த விவகாரம் குறித்து பரிபூரணமான விசாரணை நடத்த வேண்டும். இந்தச் சம்பவத்தில் என்ன நடந்தது என்பதை கண்டறியப்பட வேண்டும். சிறுமியைக் காப்பாற்ற உதவி செய்த மாமானார் சிறையில் அடைகக்ப்பட்டார். தினமும் வைத்தியசாலைக்குச் சென்றுபார்த்த மனைவி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். என்னுடைய மைத்துனர் நீண்ட நாட்களின் பின்னர் வீட்டிற்கு வந்திருந்தார். அவரும் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். எனது வீட்டிற்கு தினமும் அதிகாரிகள் வந்து விசாரணை நடத்துகின்றனர். நானும் சிறையில் இருக்கிறேன். தம்பியும் சிறையில் இருக்கிறார். குடும்பமும் சிறையில் இருக்கின்றனர். இப்போது இரண்டு பிள்ளைகள் மட்டுமே வீட்டில் இருக்கின்றனர்.

இந்தப் பரிசோதனையை சுயாதீனமாக செய்யக் கோருகிறோம். எமக்கும் நீதி வேண்டும். இசாலினியின் குடும்பத்திற்கும் நீதி வேண்டும். என்று கோரிக்கை விடுக்கிறேன். என்று தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த போது அவரது நேரம் முடிந்ததாக சபாநாயகர் இருமுறை அறிவித்தார்.

தொடர்ந்தும் ரிசாட் பதியூதீன் எம்.பி. தொடர்ந்து பேசிக் கொண்டிருந்ததால், அவரது மைக் துண்டிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆளும் கட்சி தரப்பில் பேசிய அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, ரிசாத் பதியூதீன் எம்.பி. பேசிய விடயங்களை அன்சாட்டில் இருந்து நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு ஒன்று குறித்து நாடாளுமன்ற உறுப்பினருக்கான வரப்பிரசாதங்கள் என்ற பெயரில் தனது தனிப்பட்ட விவகாரங்களையும், நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு ஒன்று குறித்தும் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவதாக ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ அமைச்சர் குறிப்பிட்டார்.

இதுகுறித்து ஆராய்ந்து தீர்மானம் எடுப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *