இலங்கையில் நூற்றில் முப்பது பேருக்கு கொரோனா!

எப்படி ஒரு நிலை வரக்கூடாது என்று கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக எச்சரிக்கை செய்தோமோ அந்த நிலை இப்போது உருவாக தொடங்கி இருக்கிறது. இது வெறும் டீசர் தான். ஒரு சுனாமிப்பேரலையின் சிறு அலை போல, பெரும் தீப்பிழம்பின் ஒரு கங்கு போல. மெயின் பிக்சர் இன்னும் ஓரிரு வாரங்களில் வெளிவந்து விடும்.

ஆகவே, இந்த நாட்களில் யாருக்காவது காய்ச்சல், இருமல், மூக்கடைப்பு, தொண்டை நோவு, உடல் அசதி, கடுமையான தலையிடி, இயலாமை, மணம், சுவை உணர முடியாமை, வயிற்றோட்டம் போன்ற நோய் அறிகுறிகளில் ஒன்றோ பலதோ இருந்தால் அது கொரோனா தான். கொரோனாவே தான்(Until proven otherwise)

உத்தியோகபூர்வ கணக்குப்படி எழுந்தமானமாக சமூகத்தில் எடுக்கும் PCR டெஸ்களில் 20% கொரோனா பொஸிடிவ் என்பதாக சொல்லப்படுகிறது. இருந்தாலும் தனிப்பட்ட தரவுகளை வைத்து ஆராய்கின்ற போது இது 40% தொடக்கம் 45% இருக்கின்றது. அப்படியனால் ஒரு குறைந்தது 30%ஆவது இருக்க முடியும்.

இதன் அர்த்தம் உங்களைச்சுற்றி உள்ள 100 அயலவர்களில், குறைந்தது 30 அயலவர்களுக்கு கொரோனா இருக்கிறது. இன்று உங்களோடு கடையில் தேநீர் அருந்திய 10 நண்பர்களில் மூவருக்கு கொரோனா இருக்கிறது. நேற்று மாலை உங்களோடு கதைத்துக் கொண்டிருந்த 5 உறவினர்களில் இருவருக்கு கொரோனா இருக்கிறது. இது மினிமமான, ஒரு எளிய கணக்கு மாத்திரமே.

Dr.Arshath Ahamed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *