ஊரடங்கால் அதிகரிக்கும் ஒன்லைன் உறவுகள்!

கொரோனா தொற்றுக்குப் பிறகு, சென்னை மக்கள் ஒன்லைன் நட்பை வளர்ப்பதில் அதிகமான ஆர்வம் காட்டுவதாக சமூக வலைத்தளமான பம்பிள் பிஎஃப்எஃப் (Bumble bff app) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தொற்றுநோய்க்குப் பிறகு ஒன்லைனில் ‘பிளாட்டோனிக்’ (platonic) (முற்றிலும் உள்ளுணர்வுகள் மற்றும் கருத்தியல் சார்ந்த உறவு) உறவுகள் மற்றும் நட்பை உருவாக்க 28 சதவிகித (திருமணமாகாத) தனித்து இருக்கும் இந்தியர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர் என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

பயனர்களின் இந்த அதிகரிப்பு, ஆன்லைனில் மக்களைச் சந்திப்பது முன்பை விட இயல்பாக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கிறது.

பம்பிள் பிஎப்எப் என்பது பம்பிள் பயன்பாட்டில் உள்ள நண்பரைத் தேடும் முறை, அருகிலுள்ள சாத்தியமான நண்பர்களுடன் இணைக்க ஒரு சுயவிவரத்தை இதில் உருவாக்க முடியும்.

2021 ஆம் ஆண்டில், முதல் மூன்று மாதங்களில் மட்டும், உலகளவில் பம்பிள் பிஎப்எப் இல் செலவழிக்கப்பட்ட சராசரி நேரம், பெண்கள் 44 சதவிகிதமாகவும் ஆண்கள் 83 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளதாக கூறப்படுக்கிறது.

பம்பிள் இந்தியா நிறுவனத்தின் தகவல் தொடர்பு இயக்குனர் சமர்பிதா சமத்தார் இந்த பம்பிள் பிஎப்எப் செயலியைப்பற்றிக் கூறும்போது,

“இன்றைய காலக்கட்டத்திற்கு சமூக வளைத்தலங்கள், மக்கள் ஒருவரை ஒருவர் தொடர்புக் கொள்ளவும், கருத்துக்களைப் பறிமாறிக்கொள்ளவும் முக்கிய பங்கு வகிக்கிறது.

உறவுகள் மேம்படவும் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வலுவானதாக மாற்ற சமூக வலைத்தளங்கள் முக்கிய கருவிகளாக அமைகிறது” எனக் கூறுகிறார்.

“உறவுகள் முக்கியம் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். தற்போதைய சூழலில் தனிமைப்படுத்தப்படுவது எளிது. நமக்கு வயதாகும்போது, ​​பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்களின் தொடர்பு எளிதில் தொலைந்து போகின்றது.

புதியவர்களைச் சந்திப்பது அல்லது புதியவர்களை உருவாக்குவது கடினமாக இருக்கும். எங்கள் சமீபத்திய ஆய்வின்படி, இந்தியாவில் அதிகமான மக்கள் தனது நண்பர்களைக் கண்டுபிடிக்கத் தயாராக உள்ளனர்.

பம்பிள் பிஎப்எப் இணைய விரும்பும் நோக்கத்துடன், ஒத்த எண்ணம் கொண்டவர்களைச் சந்திக்க இது ஒரு சிறந்த இணையதளமாகும்” என்கிறார் சமர்பிதா சமத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *