இலங்கையின் இறுதி ஒலிம்பிக் கனவும் வீணானது!

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி ஒலிம்பிக்கில் குதிரை ஓட்ட போட்டியில் பங்கேற்ற மெடில்டா கால்சன் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்துள்ளார்.
தகுதிகான் முதல் சுற்றுப்போட்டியில் மெட்டில்டா இன்று போட்டியிட்டார்.
இலங்கைச் சார்பில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற முதலாவது குதிரையேற்ற வீராங்கனை என்ற சாதனையை அவர் தன்னகத்தே கொண்டுள்ளார்.
இம் முறை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற அனைத்து வீர, வீராங்களைகளும் தோல்வியடைந்திருந்த நிலையில் மெடில்டா கால்சன் மீது இலங்கை ரசிகர்கள் அதீத நம்பிக்கை வைத்திருந்தனர்.
இந்த நிலையில் மெடில்டா கால்சன் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்ததன் மூலம், இலங்கையின் ஒலிம்பிக் எதிர்பார்ப்பு பூச்சியமாகியுள்ளது.