அமைச்சரின் மகனுடன் உறவிலிருந்த யுவதி தற்கொலை!

அம்பாறை மாவட்டத்தினை பிரதிநிதித்துவபடுத்திய முன்னாள் அமைச்சர் ஒருவரது மகனுடன் உறவிலிருந்த நேபாளத்தை சேர்ந்த பெண் பம்பலபிட்டியில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இறந்த யுவதியின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது.

நேபாளத்திலிருந்து சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்த குறித்த யுவதி, கொழும்பு பம்பலபிட்டியில் உள்ள கிளப் ஒன்றில் சிலகாலம் பணியாற்றியுள்ளார். அத்தோடு அமைச்சர் ஒருவரது மகனுடன் சிறிது காலம் உறவு வைத்துள்ளார்.

இதன்போது வெள்ளவத்தை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு யூனிட்டை வாடகைக்கு எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வியாழக்கிழமை (29) மாலை யுவதி தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை அவதானித்த மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற வெள்ளவத்தை பொலிசார், உடலை மீட்டதோடு விசாரணையை ஆரம்பித்துள்ளனர். குறித்த யுவதியின் மரணத்திற்கான காரணம் இன்னும் தெளிவாக கிடைக்கவில்லை. மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்த வீட்டில் வசிப்பதற்காக வந்தமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளது.

அத்தோடு அமைச்சரின் மகன் அவ்வவ்போது இங்கு வந்து யுவதியுடன் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது. இப்பொழுது அம்பாறை மாவட்டத்தில் கட்சி அமைப்பாளராக இருக்கும் முன்னாள் அமைச்சரது மகன் விசாரனைக்கு உட்படுத்தப்பட உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *