உலக அழகி குடும்பத்துடன் நடிகர் சரத்குமார் குடும்பம் சந்திப்பு!

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோரை குடும்பத்துடன் சரத்குமார் மற்றும் அவரது மகள் வரலட்சுமி சரத்குமார் சந்தித்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் தற்போது ஐஸ்வர்யா ராய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்காக புதுச்சேரியில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஐஸ்வர்யா ராய் தனது குடும்பத்துடன் புதுச்சேரிக்கு வந்துள்ளார்.

இதேபோல், பொன்னியின் செல்வன் படத்தில் மற்றுமொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடித்து வருகிறார்.

இந்த படப்பிடிப்பின் போது, சரத்குமாரும், ஐஸ்வர்யாராயும் நட்பாக பழகியுள்ளனர். இந்நிலையில், நட்பின் அடிப்படையில் இருவரும் தங்களது குடும்பத்தினருடன் சந்தித்துள்ளனர்.

ஐஸ்வர்யா ராய், தனது கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் மகள் ஆராத்யா ஆகியோர்களை சரத்குமார் மற்றும் அவரது மகள் வரலட்சுமி சரத்குமார் சந்தித்தனர்.
இந்த புகைப்படங்களை நடிகை வரலட்சுமி தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *