பிணவறை தொழிலுக்கு விண்ணப்பித்த 2200 பட்டதாரிகள்!

மேற்கு வங்கம் கொல்கத்தாவில் உள்ள நீல் ரத்தன் சிர்கார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் பிணவறை ஆய்வகத்தில் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான குறைந்தப்பட்ச கல்வி தகுதி 8ம் வகுப்பு, மாத சம்பளம் ரூ.15 ஆயிரம். இந்த வேலைக்கு 100 இன்ஜினியர்கள், 500 முதுகலை, 2,200 இளநிலை பட்டதாரிகள் உள்பட 8 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதில், தேர்வான 84 பெண்கள் உள்ளிட்ட 784 பேருக்கு அடுத்த மாதம் 1ம் திகதி எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. வழக்கமாக, பிணவறை தொழிலில் இருப்பவர்களின் குடும்பத்தினர் மட்டுமே விண்ணப்பிக்கும் வேலைக்கு முதல் முறையாக இன்ஜினியர்கள், பட்டதாரிகள் விண்ணப்பித்து இருப்பது ஆச்சரியம் அளிப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நாட்டில் வேலை வாய்ப்பு இல்லாததை அம்பலபடுத்துவதற்கான ஒரு உதாரணம் இந்த சம்பவம்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *