இறைச்சியை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சாப்பிடலாமா?

இந்த உலகில் இன்றைய சூழலில் அனைவருக்கும் குளிர்சாதன பெட்டி மிகவும் தேவைப்படும் ஒரு பொருளாக மாறியுள்ளது. அதற்கு முக்கியக் காரணம் அடிக்கடி வெளியில் சென்று பொருட்களை வாங்கி வர வேண்டிய அவசியமில்லை.

ஒரே நேரத்தில் தேவையான பொருட்களை வாங்கி வந்து குளிர்சாதன பெட்டியில் சேகரித்து வைத்துவிட்டால் சில நாட்களுக்கு அதை பயன்படுத்தலாம்.

ஆனால், குளிர்சாதன பெட்டியில் அதிக நாட்களுக்கு உணவு பொருட்களை வைத்துக்கொண்டு பயன்படுத்தலாமா? எத்தனை நாட்களுக்கு குளிர்சாதன பெட்டியில் உணவுகளை வைக்கலாம்? என தெரிந்துகொள்வோம்.

குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டுள்ள இறைச்சியை சாப்பிடுவதன் மூலம் சில உடல் உபாதைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், நீண்ட நாட்கள் ஃபிரிட்ஜில் (Deep Freezer) வைத்திருக்கும் இறைச்சியில் பாக்டீரியா உருவாகிவிடும்.

அதை சாப்பிடுவதன் மூலம் இரைப்பையில் நோய் உங்களை தாக்கலாம். குளிர்சாதன பெட்டியின் மிகக் குறைந்த மற்றும் குளிரான பகுதியில் இறைச்சியை வைக்கவும்.

மேலும் ஃபிரிட்ஜில் இருக்கும் மற்ற உணவுப் பொருட்களிலிருந்து விலகி இருக்க வேண்டும். சமைத்த இறைச்சி மற்றும் சமைக்காத இறைச்சி இரண்டையும் தனித்தனியாக வைக்க வேண்டும்.

அதே நேரத்தில், ஃபிரிட்ஜில் இருந்து எடுத்து சமைத்த பிறகு, அதை அடுத்த 24 மணி நேரத்திற்குள் சாப்பிட வேண்டும். இறைச்சியை நீண்ட நாட்கள் குளிர்சாதன பெட்டியில் வைத்திருப்பதால், அதை சாப்பிட்ட பிறகு உணவு விஷமாக மாறக்கூடிய அபாயம் அதிகம்.

இது தவிர, பல நாட்கள் இறைச்சியை குளிர்சாதன பெட்டியில் வைப்பதால் அதன் சுவை மற்றும் புரத சத்துக்கள் குறையும். சமைக்காத இறைச்சியை (Raw meat) ஒருபோதும் ஒரு நாளை அல்லது இரண்டு நாளைக்கு மேல் குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது.

ஆனால் சமைத்த இறைச்சியை குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம். ஆனால் அது சூடாக இருக்கக்கூடாது. அதுவும் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் வைக்கக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *