ரிஷாத் பதியுதீன் மற்றும் விமல் வீரவங்ச வீடுகளில் நடந்த மர்ம மரணங்கள்!

ரிஷாத் வீட்டில் பணிபுரிந்த சிறுமியின் மரணம் தொடர்பிலும், விமல் வீட்டில் இறந்த இளைஞர் தொடர்பிலும் சபையில் எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கும், அமைச்சர் விமல் வீரவங்சவிற்கும் இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாவது நாள் விவாதத்தின் போது உரையாற்றிய அமைச்சர் விமல் வீரவன்ச வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் முஜிபுர் ரஹ்மான் பதிலளித்து உரையாற்றும் போதே இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

இதனால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டு கடும் கூச்சலும் ஏற்பட்டது. முஜிபுர் ரஹ்மான் குறிப்பிடுகையில், வீரவன்சவின் வீட்டில் 20 வயது இளைஞரொருவர் உயிரிழந்தார். இதோ இருக்கிறார் (ரணிலை காட்டி) இந்தப் பிரதமர் தான் காப்பாற்றினார்.

இல்லை என்றால் சிறையில் இருந்திருக்க வெண்டும். இளைஞரை வீட்டுக்கு கொண்டு வந்து கொன்றவர்கள் இப்போது ரிஷாத் வீட்டில் சிறுமி இறந்தமை தொடர்பில் கதைக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *