ஈராக்கில் ISIS தாக்குதல் 25 பேர் உயிரிழப்பு!

ஈராக் தலைநகர் பக்தாத்திலுள்ள சந்தைத் தொகுதியொன்றில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உள்ளுர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதில் பலர் காயமடைந்துள்ளனர்.

கடந்த 06 மாதங்களில் இடம்பெற்ற மிக ​மோசமான தாக்குதல் சம்பவம் இதுவென ஈராக் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியுள்ளது. தமது அமைப்பைச் சேர்ந்தவர்களே தற்கொலை தாக்குதலை நடத்தியுள்ளதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *