இலங்கை அணித்தலைவர் மற்றும் பயிற்றுவிப்பாளர் சண்டையை கண்டித்த வர்வணனையாளர்!

சுற்றுப்பயண இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, களத்தில் அணித்தலைவர் தசுன் ஷானக மற்றும் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் இடையே சூடான விவாதம் இடம்பெற்றது.

இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரபல கிரிக்கெட் வர்ணனையாளராகிய இலங்கையைச் சேர்ந்த ரஸல் ஆர்னோல்ட்,

உடைமாற்று அறையில் நடக்க வேண்டிய சம்பாசனை மைதானத்தில் இடம்பெற்றிருப்பது தவிர்க்கப்பட வேண்டியதாகும் எனக் கூறியுள்ளார்.

இதேவேளை தசுன் ஷானக மற்றும் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் இடையே பரபரப்பான வாதத்தின் பல புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

மேலும் இந்த போட்டியில் வெற்றிபெற இலங்கைக்கு வாய்ப்பு கிடைத்தது, ஆனால் 03 விக்கெட்டுகள் மட்டுமே கையில் இருந்த கடுமையான சண்டையின் பின்னர் இந்தியா கடைசி ஓவரை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *