பெளத்த துறவிகளை காட்டி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று அவர்களை கைது செய்கிறார்கள்!

மஞ்சள் காவி உடையை முழுமையாக அரசியல் மேடைகளில் பயன்படுத்தி சிங்கள பௌத்தம் என்று மேடைக்கு மேடை விற்பனை செய்து ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவர்கள் இன்று வெட்கமின்றி மஞ்சள் காவி உடை அணிந்தவர்கள் மீது கை வைத்து கேவலப்படுத்தி வருவதாக தேசிய சங்க சபையின் செயலாளர் பாகியாங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.

15 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட விடயம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ள பட்டியல் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரிடம் முறைப்பாடு செய்ய வந்தபோது ஆனந்த சாகர தேரர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த பட்டியலில் உள்ளபடி குற்றம் நிரூபிக்கப்படும் பிக்குகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு ஏனைய பிக்குகளுக்கு தலைநிமிர்ந்து பணியாற்றக் கூடிய நிலைமை உருவாக்கப்பட வேண்டும் என ஆனந்த சாகர தேரர் கேட்டுக்கொண்டுள்ளார்.

குற்றமற்ற பிக்குகளுக்காக தான் முன்னிலையாக இருப்பதாகவும் இந்த 15 வயது சிறுமி பாலியல் வல்லுறவு தொடர்பான வழக்கு பகிரங்க நீதிமன்றத்தில் இடம் பெற வேண்டும் எனவும் ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *