கொரோனா வைரஸ் தடிமனுக்கு சமனானது தடுப்பூசி வழங்குவது வீண் பணவிரயம்!

கொரோனா வைரஸ் தடிமனுக்கு சமமானது எனவும் தொற்றுக்குள்ளானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இயல்பாகவே இருக்கும். எனவே நாட்டில் உள்ள அனைவருக்கும் கொவிட் தடுப்பூசி வழங்குவதென்பது வீண் பணவிரயம் என பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

இதன்படி ,நாட்டில் 80 வீதத்திற்கு மேற்பட்டோருக்கு இந்த வைரஸின் தாக்கம் மிகவும் குறைவு.

சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், இருதய கோளாறு போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மாத்திரம் தடுப்பூசி வழங்குவத போதுமானதாக இருக்கும் என பேராசிரியர் திஸ்ஸ விதாரன குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ,இதேவேளை உலகளவில் பார்க்கும் போது இலங்கையில் கொரோனா மரணங்களின் வீதம் மிகவும் குறைவு எனவும் அது 100க்கு 1.5 வீதமாகவே காணப்படுவதாகவும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *