பூமியை நோக்கி வரும் அதிசக்தி வாய்ந்த சூரியப்புயல் நாசா அறிவிப்பு!

சூரியனின் மேற்பரப்பில் தற்போது ஏற்பட்டிருக்கும் புயலானது சுமார் ஒரு மில்லியன் வேகத்தில் சுழன்று வீசுவதாகவும், 1.6 மில்லியன் வேகத்தில் நகர்ந்து கொண்டிருப்பதாகவும் நாசா தெரிவித்துள்ளது.

சூரியனில் ஏற்பட்டுள்ள அதிக சக்தி வாய்ந்த இந்த கதிர்வீச்சுப் புயலானது இன்று அல்லது நாளை பூமியைத் தாக்குவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் நாசா செய்தி வெளியிட்டுள்ளது.

இதனால் உலகின் தொலைபேசி மற்றும் ஜி.பி.எஸ் உள்ளிட்ட பல தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் அந்த ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சூரியனின் கரும்புள்ளிகள் பரப்பில் அதிக கதிர்வீச்சு கொண்ட புயல் உருவாகியிருப்பதாகவும், அவை பூமியை நோக்கி வருவதாகவும் விண்வெளி ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பூமியின் மேற்பரப்பில் இருக்கும் காந்தப்புலம், மிக வலுவாக இருப்பதால் மிகப்பெரிய சேதங்கள் ஏற்படாது என்றும், ஒரு வேளை கதிர்வீச்சின் தன்மை அதிகமாக இருந்தால் பூமியின் மேற்புறத்தில் இருக்கும் செயற்கோள்களை பாதிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

அடுத்தடுத்த நிலைகளில் சூரியப் புயலின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை என விளக்கம் அளித்துள்ளனர்.

வடக்கு மற்றும் தெற்கு அட்சரேகை பகுதிகளில் இதன் பாதிப்பை உணர முடியும் எனத் தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் , சூரியப் புயல் குறித்து வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிடுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதேநேரம், சூரியப் புயல் ஏற்படுத்தும் சேதம் குறித்து உன்னிப்பாகக் கவனித்து வரும் சார்ஜா விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் இது தொடர்பாக விளக்கமளித்துள்ளனர்.

பூமியை நோக்கி வரும் சூரியப் புயல் குறித்து தாம் கவனித்து வருவதாகவும் , பூமியின் மேற்பரப்பில் அவை ஏற்படுத்தும் தாக்கம் குறித்து அளவிட இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

பூமியின் காந்தப்புலங்கள் பாதுகாப்பு கவசமாக இருந்தாலும், அவை என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது கணிக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், 2022ஆம் ஆண்டுகளிலிருந்த சூரியனில் இருக்கும் கரும்புள்ளிகள் மூலம் புயல் உருவாக வாய்ப்புள்ளதாகவும், அவை பூமியின் காந்தப்புலத்தில் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

1989ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு சூரியப் புயல் காரணமாக கனடா நாட்டின் கியூபெக் மாகாணத்தில் மின் அதிர்வுகள் ஏற்பட்டு அவற்றிலிருந்து வெளிப்பட்ட ஒளியால் அப்பகுதியில் இரு நாட்களுக்குப் பிரகாசமான ஒளி வீசியதும் குறிப்பிடத்தக்கது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *