இலங்கையில் முதலாவது சந்தனமர பூங்கா!

கொழும்பில் அமைக்கப்பட்ட இலங்கையின் முதலாவது சந்தனமர பூங்காவின் பணிகள் நிறைவடைந்துள்ளது. விரைவில் பொதுமக்களுக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி கோட்டபாஜ ராஜபக்ஷ மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீட்டுவசதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் அறிவுறுத்தலின் கொழும்பு பத்திரமுள்ள பகுதியில் 1000 சந்தனமரங்களைக் கொண்டு குறித்த பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இப் பூங்காவிற்கு நடுவில் 200,000 லீற்றர் நீர் கொள்ளக்கூடிய 11 நீர் தடாகங்களும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தரமரப்பூங்காவில் அழகான முறையில் வர்ண மின்விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.

நுழைவாயில் பார்வையாளர்கள் இருபுறமும் வண்ணமயமான பூங்கொத்துகளுடன் சுற்றுச்சூழலில் மின்விளக்குகள் உள்ளன. இதனை பொது மக்களால் இலவசமாக பார்வையிடலாம்.

இந்த புதிய பூங்காவின் கட்டுமானம் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது, முதல் கட்டமாக ரூ. 132 மில்லியன் மற்றும் இரண்டாவது ரூ. 162 மில்லியன். இந்த பூங்க அமைக்கப்படுகின்றது. .

நகரங்களை பசுமை நகரங்களாக மாற்றுவதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அமைவாக குறித்த பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சந்ததோட்டம் சுதந்திரம், மனஅமைதி, உடற்பயிற்சி , யோகா பயிற்சிகளை நடத்துவதற்கும், பல்வேறு தியான நிகழ்ச்சிகளை செய்வதற்கும் ஒரு சூழலை உருவாக்கும். பார்வையாளர்கள் இயற்கை உணவு மற்றும் பானங்களை அனுபவிக்க முடியும், ”

தோட்டத்தில் ஒரு திறந்த கார் பூங்காவும் இருக்கும், இது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மொத்தம் 60 வாகனங்களை நிறுத்த போதுமானது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *