இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை இல்லை!

இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு அரசு நலத்திட்டங்களை குறைத்தல் போன்றவை உத்தரபிரதேச அரசின் மக்கள் தொகை கட்டுப்பாட்டு வரைவு மசோதாவில் இடம் பெற்றுள்ளன.

உத்தர பிரதேச மாநிலத்தில் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்காக அம்மாநில அரசு புதிய வரைவு சட்டத்தை வெளியிட்டுள்ளது. 

உத்தரபிரதேச மக்கள் தொகை (கட்டுப்பாடு, உறுதிப்படுத்தல் மற்றும் நலன்கள்) மசோதா 2021-வை அம்மாநில சட்ட கமிஷன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த மசோதா குறித்து ஜூலை 19ஆம் தேதிக்குள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. 

வரைவு மசோதாவில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள்: 

* 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும். 

* அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது. அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வும் கிடையாது.

*2 குழந்தைகள் பெற்று கொண்டவர்களுக்கு அவர்களது பணிக்காலத்தில் கூடுதலாக 2 இன்க்ரிமென்ட் வழங்கப்படும். அல்லது பேறு கால விடுமுறை 12 மாதம் முழு சம்பளத்துடன் வழங்கப்படும்.

*தேசிய பென்சன் திட்டத்தில் ஊழியர்களின் பங்களிப்பில் கூடுதலாக 3 சதவீத படி உயர்த்தி தரப்படும்.

2 குழந்தை விதிமுறைகளை பின்பற்றவர்களுக்கான சலுகைகள்:

இரண்டு குழந்தை விதிமுறைகளை பின்பற்றும் அரசு ஊழியர்களுக்கு முழு சேவையின் போது இரண்டு கூடுதல் ஊதிய உயர்வுகள்  கிடைக்கும். மகப்பேறு அல்லது விடுப்பு 12 மாதங்கள், முழு சம்பளம் மற்றும் அலவன்ஸ்  மற்றும் தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் முதலாளியின் பங்களிப்பு நிதியில் மூன்று சதவீதம் அதிகரிக்கும்.

ஒரே குழந்தையுடன் நிறுத்திக் கொள்பவர்களுக்கு இவை தவிர மேலும் பல சலுகைகள் வழங்கப்படும் என்றும் வரைவு மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *