எட்டு குழந்தைகளை பெற்றதற்காக 2.6 மில்லியன் யுவான் அபராதம்!

 

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் பல ஆண்டுகளாக ஒரு குழந்தை திட்டமே அமலில் இருந்தது. அதாவது ஒரு தம்பதி ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ளலாம். பின்னர் இந்த கொள்கையில் கடந்த 2016ஆம் ஆண்டு மாற்றம் கொண்டு வரப்பட்டது. அப்போது, ஒரு தம்பதி இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என அனுமதி அளிக்கப்பட்டு புதிய கொள்கை  அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாக சரிந்த நிலையில் குடும்ப கட்டுப்பாட்டு விதிமுறைகளில் சீனா தளர்வுகளை அண்மையில் அறிவித்திருந்தது. ஒரு தம்பதி, 3 குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ள அனுமதி அளித்துள்ளது. 

இந்த நிலையில், சீனாவின் குடும்பக் கட்டுப்பாடு சட்டங்களை மீறியதற்காக 8 குழந்தைகளைக் கொண்ட ஒரு சீன குடும்பத்துக்கு 2.6 மில்லியன் யுவான் அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது 90,000 யுவான் ஆக குறைக்கப்பட்டதாக சீன ஊடகங்கள் திங்களன்று தெரிவித்துள்ளது.

லியு என்ற 50 வயதான விவசாயி மற்றும் அவரது முன்னாள் மனைவி குழந்தைகளைப் பெற்றுள்ளனர். மேற்கு சீனாவின் சிச்சுவானில் வசித்து வரும் அந்த தம்பதியர் 2006 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் இரண்டு மகன்களைப் பெற்றெடுப்பதற்கு முன்பு ஐந்து மகள்களும், ஒரு மகளும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *