பஷிலின் வருகையால் முக்கிய அமைச்சர்கள் இருவர் இடமாற்றம்!

நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு நாடாளுமன்றத்தில் முன்வரிசையில் 09ஆம் இலக்க ஆசனம் ஒதுக்கப்பட்டதால் அதன் விளைவாக இரண்டு முக்கிய அமைச்சர்களின் ஆசனங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி நீதி அமைச்சர் அலிசப்ரி மற்றும் துறைமுக அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன உள்ளிட்டவர்களின் ஆசனங்களே இவ்வாறு மாற்றப்பட்டிருக்கின்றன.
இவர்கள் இருவருக்கும் இரண்டாம் வரிசையில் ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளன.