தனிநபராக விமானத்தில் பயணித்த அதிர்ஷ்டசாலி!

தனியாக ஒரு விமானத்தில் பறக்க ஆசைப்பட்டுள்ளீர்களா?

பொதுவாக அப்படி பறக்க வேண்டும் என்றால் சொந்தமாக விமானம் வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் குறைந்தது விமானத்தை வாடகைக்கு எடுக்கும் அளவிற்காவது பணம் இருக்க வேண்டும். இரண்டும் இல்லாதவர்களுக்கு அது வெறும் கனவுதான்.ஆனால், சமீபத்தில் ஒருவர் சாதாரண டிக்கெட்டில் தனி ஆளாக விமானத்தில் இந்தியாவிலிருந்து துபாய் வரை பறந்துள்ளார்.

ஐக்கிய அமீரகத்தில் வாழும் இந்திய தொழிலதிபர் எஸ்பி சிங் ஓபராய். இவர் அவ்வப்போது இந்தியாவிற்கும் துபாய்க்கும் அடிக்கடி பயணிப்பார். இப்போது துபாய் நாட்டு கொரோனா விதிமுறைகளின்படி அந்நாட்டு குடிமகன்கள், அந்நாட்டிற்கான கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்தியாவிலிருந்து துபாய்க்கு பயணம் செய்ய முடியும்.
இதனால் மிகக் குறைவான பயணிகளே இந்தியாவிலிருந்து இப்போது துபாய்க்கு பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில் எஸ்பி சிங் துபாய்க்கு செல்ல டிக்கெட் புக் செய்தார். அவரது பயண நேரம் இந்திய நேரப்படி அதிகாலை 3.45.அதன்படி விமானநிலையம் சென்று விமானத்தில் ஏறியவர் ஷாக் ஆனார்.யெஸ். அவரைத் தவிர விமானத்தில் யாருமில்லை! விமானப்பணிப்பெண்களிடம் இதுகுறித்து கேட்டபோது ‘அவர்தான் அந்த விமானத்தில் தனி ஆளாக பயணிக்கப் போகிறார்…’ எனக் கூறியுள்ளனர். இதைக் கேட்டதும் எஸ்பி.சிங் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை!

பின்னர் விமானப்பணிப் பெண்கள் உதவி யுடன் அவர் எடுத்த புகைப்படம் இன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.‘‘அடுத்த முறை இப்படி தனியாக பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நிராகரித்து விடுவேன். வாழ்வில் ஒருமுறை அனுபவிக்க நன்றாக இருந்தது. ஆனால், மீண்டும் மீண்டும் இப்படி பயணித்தால் போர் அடிக்கும்…’’ என்கிறார் எஸ்பி சிங்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *