அயன்’ பட பாணியில் தங்க கடத்தல் சிக்கியது எப்படி?

’அயன்’ பட பாணியில் தங்க கடத்தல்.. சிக்கியது எப்படி?

kumudam bookmark line

கேரள மாநிலத்தில் ஓர் நபர் தனது பேண்டுக்குள் 200 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை மறைத்து வைத்து கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் உள்ள திருவனந்தபுரம், கோழிக்கோடு, கண்ணூர், கொச்சின் ஆகிய பகுதிகளில் தங்கம் கடத்தல் சம்பவங்கள் அதிகமாக நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனால், இந்த பகுதிகளிலும் மற்ற பகுதிகளிலும் போலீசார் சமீப காலமாக தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், ஜூலை 1ம் தேதி துபாயில் இருந்து கோழிக்கோடு வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தங்கம் கடத்திக்கொண்டு வரப்படுகிறது என புலனாய்வுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

எனவே, அந்த விமானத்தில் வந்த அனைத்து பயணிகளிடமும் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். அப்போதான் காசர்கோடு பகுதியை சேர்ந்த ஷபீர் என்ற 31 வயது நபர் மாட்டியுள்ளார். அவர் மீது சந்தேகம் ஏற்படவே அவரை தீவிர சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். அப்போது அவர் தனது பேண்டுக்குள் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை உருக்கி மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. தங்க பேஸ்டை பேண்டில் பூசி அதன் மீது லைனிங் துணியை வைத்து தைத்து அந்த தங்கத்தை மிக நூதனமாக கடத்த முயன்றுள்ளார். ஷபீர் தற்போது துபாயில் இருந்து வந்ததால் 14 நாட்கள் குவாரன்டைனில் உள்ளார். அந்த குவாரன்டைன் பீரியட் முடிந்தது இதுகுறித்து அவரை விசாரிக்க போலீசார் முடிவெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *