கல்முனையில் நிலைமை மிக அபாயம் அலட்சியம் செய்தால் தினமும் 5 மரணம் ஏற்படும்!

இப்படியே மக்கள் அலட்சியம் தொடர்ந்தால் தினமும் ஐந்து இறப்புக்களும் 300 – கொவிட் 19 நோயாளிகளும் உருவாகும் நிலை அடுத்த மாதங்களில் ஏற்படலாம்.

  1. முடிந்த அளவு வீட்டிற்குள்ளேயே இருங்கள்.
  2. வீட்டின் வாசற்படியை கடந்து கொண்டால் முகக் கவசத்தை முறையாக அணிந்து கொள்ளுங்கள். மீண்டும் வீட்டினுள் சென்ற பின்தான் அகற்ற வேண்டும்.
  3. பொது இடங்களில் இரண்டு மீட்டர் தூர இடைவெளியை கடைப்பிடித்து கொள்ளுங்கள்.
  4. கைகளை சவர்க்காரம் இட்டோ சனிடைசர் மூலமாகவோ அடிக்கடி சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

நாம் எவ்வளவு தான் எங்களை வருத்தி முயற்சி செய்தாலும் நீங்கள் அனைத்தையும் பாழாக்கி விட்டு இப்போது பாரிய விலையை கொடுக்க தொடங்கும் கல்முனை பிராந்திய மக்கள்.

விதைப்பிற்கு ஏற்றால் போல்தான் அறுவடை இருக்கும்.

அலட்சியம் எனும் விதைகளை நிறையவே விதைக்கின்றீர்கள். சாபம் எனும் விளைச்சலை அனுபவித்தே ஆகவேண்டும்.
புரிந்தவன் ஆறறிவு படைத்த மனிதன்.

இருப்பினும் நாங்கள் உச்ச மட்டில் எங்களது பங்களிப்பை வழங்குவோம்.

Dr.சுகுணண்
பணிப்பாளர்
RDHS – கல்முனை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *