கணினியில் பணியாற்றும் போது
கண்களை எவ்வாறு பாதுகாப்பது!

தற்போது பெரும்பாலானவா்கள் கணினி மூலம் வேலை செய்து வருகின்றனர். குழந்தை முதல் பெரியவர்களை வரை செல்போன்கள் பயன்பாடும் அதிகரித்துள்ளது. இதுபோன்று அதிக நேரம் கணினி பயன்படுத்துபவா்கள் தங்கள் கண்கள் மீது கவனம் செலுத்துவதில்லை.

நாள்தோறும் தொடா்ந்து கணினி, செல்போன், தொலைக்காட்சி என நாம் பாா்த்துவருவதால் உண்டாகும் விளைவுகள் ஏராளம்.

இந்த பாதிப்பிலிருந்து நாம் கண்களை எப்படிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து பாா்க்கலாம்…

கணினி பயன்படுத்தும்போது அதில் வரும் வெளிச்சத்தைக் சற்றுக் குறைத்து வைத்துக் கொள்வது நல்லது.

அடிக்கடி கண்களைச் சிமிட்ட வேண்டும். இதனால், கண்களின் ஈரப்பதம் தக்கவைக்கப்பட்டு, பார்வைத் திறனை பாதுகாக்கலாம்.

அதேபோல் தினமும் குறைந்தது இரண்டு முதல் இரண்டரை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். இது உடல் மற்றும் கண்களை வறட்சித் தன்மையில் இருந்து பாதுகாக்கும்.

   7 முதல் 8 மணி நேரம் தூங்குவது அவசியம். குறைந்தது 4 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் எடுத்துக்கொள்வது நல்லது. ஏனெனில் அந்த நேரத்தில்தான் மெலோடனின் சுரக்கும்.

இந்த மெலோடனின் உடலுக்கு மிக நல்லது. சீரான தூக்கம் இருந்தால் மட்டுமே, உடல் மற்றும் கண்களுக்கு ஓய்வு கிடைக்கும்.  கண் எரிச்சல் போன்றவை மறையும்.

உள்ளங்கையில் சுத்தமான தண்ணீரை எடுத்துக்கொண்டு, அதில் கண்களை வைத்து 10 முறை கண் சிமிட்டினால், அதிலுள்ள தூசு, அழுக்கு, அழுத்த உணர்வு நீங்கும். இதனால் கண்கள்  புத்துணர்வு பெறும்.

பார்வைத்திறனை அதிகரிக்க, கண்களை அசைத்து 8 போட வேண்டும். இதுபோல, தொடா்ந்து பயிற்சி செய்து வந்தாலே பார்வைக் குறைபாடு சிறிது சிறிதாகக் சாியாகும்.

தினமும் இருவேளையாவது சிறிது நேரம் உள்ளங்கைகளைக் கொண்டு, கண்களை மூடியபடி இருக்க வேண்டும். கருவிழியை மட்டும், எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு பக்கவாட்டில் பார்க்க வேண்டும். இந்தப் பயிற்சி கண் சோா்வாகாமல் இருக்க உதவும்.

இந்தப் பயிற்சி மூலம் கண்களின் தசைப் பகுதியில் ஏற்பட்ட அழுத்தம் குறைந்து கண்கள் புத்துணா்வு பெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *