இலங்கை தொடர்பில் அமெரிக்கா அதிருப்தி!

மனிதக் கடத்தல் செயற்பாடுகளை முற்றாகக் கட்டுப்படுத்த இலங்கை போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.

இதன்படி ,மனித கடத்தல் தொடர்பான அமெரிக்காவின் வருடாந்த அறிக்கையில், இலங்கை 2 ஆம் அடுக்கில் வைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் ,இந்த விடயத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், குறிப்பாகச் சிறுவர் மையங்களில் இடம்பெறுகின்ற துஷ்பிரயோகங்கள் குறித்த விசாரணைகள் இடம்பெற்றிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் சர்வதேசத்துடன் இணைந்து செயற்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *