ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கில் சாவினுக்கு 22.5 ஆண்டுகள் சிறை!

ஆபிரிக்க, அமெரிக்கரான ஜோர்ஜ் ப்ளொய்ட் (George Floyd) கொலைக் குற்றவாளியான முன்னாள் காவல்துறை அதிகாரிக்கு 22 ஆண்டுகளும், 6 மாதங்களும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ,கடந்த ஆண்டு மே மாதம் இந்தக் கொலை சம்பவம் இடம்பெற்றது.

டெரெக் சுவாவின் (Derek Chauvin) என்ற காவல்துறை அதிகாரி, ஜோர்ஜ் ப்ளொய்டின் கழுத்தில், 9 நிமிடங்கள் முழந்தாளிட்டு அழுத்தியமையால் அவர் மரணித்தார்.

அந்த சம்பவத்தை அடுத்து, நிறவெறிக்கு எதிராகவும், காவல்துறையின் செயற்பாட்டுக்கு எதிராகவும் சர்வதேச ரீதியில் பெரும் எதிர்ப்புகள் வெளியாகின.

அந்நிலையில் கடந்த மாதம் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின்போது, டெரெக் சுவாவின் குற்றவாளியாக காணப்பட்டார்.

மேலும் ,இதையடுத்து அவருக்கான தண்டனை நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜோர்ஜ் ப்ளொய்டின் குடும்பத்தினரும், அவரின் ஆதரவாளர்களும் இந்தத் தண்டனையை வரவேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *