நீதிபதிகள் தொடர்ச்சியாக ஒதுங்குவதால் ரிஷாதின்
பிணைமனு கேள்விக்குறி!

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் பிணை மனுத் தாக்கல் செய்திருந்தும் நீதிபதிகள் தொடர்ச் சியாக இந்த விசாரணையிலிருந்து ஒதுங்கி வருவதால் அவரால் பிணையில் செல்ல முடியாதுள்ளது.

இது தொடர்பில் உரிய கவனம் செலுத்தி அவருக்கு நியாயம் கிடைக்க வழிசெய்யுமாறு எதிர்க் கட்சி பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரை யாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது,

எமது எம்.பிக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட வேண்டும். ரிசாத் பதியுதீன் ஒரு கட்சித் தலைவர். அவர் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் எவரும் இவ்வாறு தடுத்து வைக்கப் படவில்லை.

மக்களின் அதிகாரத்தை பாராளு மன்றம் தான் நீதிமன்றங்களுக்கு வழங்கிறது.

நாம் வழக்கு தீர்ப்புகளை விமர்சிக்கவில்லை. நீதிமன்ற தாமதம் குறித்தே பேசுகிறோம். இவர் பிணை மனு முன்வைத்துள் ளார். ஒவ்வொரு தடவையும் வழக்கு விசாரணையின் போது நீதிபதி ஒருவர் ஒதுங்குகிறார்.

28 ஆம் திகதி வழக்கு விசாரணை நடைபெற் றது.

04 ஆம் திகதி நடந்தது. இன்றும் (நேற்று 23) விசாரணை நடந்தது. மூன்றாவது தடவையும் நீதவான் ஒருவர் விசாரணையிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ரிசாத் பதியுதீன் பாராளுமன்றத் தில் இருக்கிறார். அவருக்கு எதிராக எந்த சாட்சியும் கிடையா தென பாராளுமன்ற குழுவிற்கு கடிதமொன்றை அனுப்பி தற்போதைய பொலிஸ் மாஅதிபர் அறிவித்திருந்தார்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அணு வளவு கூட அவருக்கு எதிராக சாட்சி கிடையாது.

ஜனாதிபதி ஆணைக் குழுவில் குற்றவாளிகளாக அறி விக்கப்பட்டவர்கள் மறுபக்கம் அமர்ந்துள்ளனர். இது பாராளுமன் றத்திற்கும் வெட்கமான விடயமா கும். எம்.பிக்கு நியாயம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு கோருகிறேன் என்றார்.

இதனை சபாநாயகருக்கு அறிவிப் பதாக சபைக்கு தலைமை தாங்கிய எம்.பி குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *