கணிணியில் Antivirusஐ உருவாக்கியவர் தற்கொலை!

கணிணிகளுக்கான முதல் ஆன்டிவைரஸை உருவாக்கிய ஜான் மெக்காஃபி ஸ்பெய்னில் தற்கொலை செய்துக் கொண்டுள்ளது டெக் உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியள்ளது.

முதன் முதலாக கணிணிகளுக்கான ஆன்டிவைரஸை உருவாக்கிய ஜான் மெக்காஃபி, சைபர்செக்யூரிட்டி துறையின் உலகின் முன்னோடிகளுள் ஒருவர். திறமையும், புத்திசாலித்தனமும் நிறைந்த அவர், தன் வாழ்நாள் முழுவதும் சர்ச்சைகளுடன் மட்டுமே வாழ்ந்துள்ளார். அமெரிக்காவில் வசித்து வந்த ஜான் மெக்காஃபி, வரி ஏய்ப்பு புகாரில் சிக்கினார். 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை வருமான வரி செலுத்தாத அவர் மீது அமெரிக்க வருமான வரித்துறையினர் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தது. கவுத்தமாலாவில் சில காலம் தஞ்சமடைந்திருந்த அவர், பின்னர் ஸ்பெயினில் பாய்மரப் படகு ஒன்றில் வசித்து வந்தார்.

அவரின் இருப்பிடத்தை அறிந்த அதிகாரிகள் கைது செய்து பார்சிலோனா சிறையில் அடைத்தனர். அமெரிக்கா அரசும் அவரை நாடு கடத்துவதற்கான வழக்கை ஸ்பெயினில் நடத்தி வந்தது. அமெரிக்காவுக்கு செல்ல விரும்பாத ஜான் மெக்காஃபி, தன்னை நாடு கடத்துவதற்கு அனுமதிக்க வேண்டாம் என கடந்த விசாரணையின்போது நீதிபதியிடம் வேண்டுகோள் விடுந்திருந்தார். ஆனால் அவரின் கோரிக்கை நிராகரித்த ஸ்பெயின் நீதிமன்றம், நாடு கடத்துவதற்கான அனுமதியை கொடுத்தது. 

இதனால், மன முடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.  அவரின் இறப்பை ஸ்பெயின் அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர்.அவருக்கு தற்போது 75 வயதாகிறது. அவருடைய அனுதாபிகள் மெக்காஃபியின் மரணத்தில் சந்தேகமும் தெரிவித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *