அமெரிக்காவில் 18 வாகனங்கள் மோதிக் கொண்டதில் 10பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில், 18 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பச்சிளம் குழந்தை உள்ளடங்கலாக 9 சிறுவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி ,5 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அங்கு நிலவும் சீரற்ற வானிலையால் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த விபத்தில் 9 மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ள அதேவேளை ஏனைய 8 பேரும் புனர்வாழ்வு மையத்தில் உள்ள சிறுவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் அலபாமா பகுதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல வீடுகள் சேதமடைந்துள்ளதோடு நேற்றைய தினம் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *