அமெரிக்காவில் பறக்கும் தட்டுகளால் மக்கள் அச்சத்தில்!

அமெரிக்காவை மிரட்டி வரும் பறக்கும் தட்டுகள் குறித்து எதிர்வரும் 25ம் திகதி பென்டகன் அறிக்கை வெளியிட உள்ள நிலையில், ‘பறக்கும் தட்டுகள் அமெரிக்காவை மட்டும் குறிவைத்து சுற்றி சுற்றி வருவது ஏன்? இது தேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது,’ என மூத்த எம்பி.க்கள் கவலை தெரிவித்துள்ளனர்.  வேற்றுகிரக வாசிகளான ஏலியன்களின் வாகனமாக கருதப்படும் பறக்கும் தட்டுகள் பற்றி காலம் காலமாக பல செய்திகள் கூறப்படுகிறது. அவை எதுவும் ஆதாரப்பூர்வமாக இருப்பதில்லை. ஆனாலும், ஏலியன்கள் இருக்கின்றன,

பறக்கும் தட்டும் இருக்கிறது என அமெரிக்கா மட்டும் எப்போதும் பீதியை கிளப்பிக் கொண்டேதான் இருக்கிறது. சமீபத்தில், அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன், பறக்கும் தட்டு குறித்த வீடியோ ஒன்றை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதுவரை எந்த நாடும் இதுபோன்ற ஒரு மர்ம பறக்கும் பொருள் குறித்த வீடியோக்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டதில்லை. இந்த வீடியோவில் பறக்கும் தட்டு போன்ற ஒரு பொருள் கருப்பு நிறத்தில் வானில் செல்கிறது. முதலில் மெதுவாக செல்லும் அந்த தட்டு சில நிமிடங்களில் வேகமெடுத்து மறைந்து விடுகிறது.

  • முதல்முறையாக கடந்த 2004ல் சான்டீகோவில் அமெரிக்காவின் எப்-18 போர் விமானத்தில் இருந்து பறக்கும் தட்டின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டன.
  • கடந்த ஏப்ரலில் இதே சான்டீகோ பகுதியில் கடற்படை போர்க்கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தில் முக்கோண வடிவத்தில் ஒரு பறக்கும் தட்டு மின்னல் வேகத்தில் செல்வது சிக்கியுள்ளது.
  • அதோடு, அமெரிக்காவில் சமீபத்தில் மர்ம உலோக தூண் பல இடங்களில் தோன்றி பீதி கிளப்பியது.
  • அமெரிக்காவில் இவை பீதியை கிளப்பியுள்ளது. ஆண்டாண்டு காலமாக பென்டகன் பறக்கும் தட்டு பற்றி ஆய்வு செய்து வருகிறது. அதில் கண்டறியப்பட்ட பல அதிர்ச்சிகரமான தகவல்களை வரும் 25ம் தேதி அது வெளியிடுகிறது.
    இந்நிலையில், பென்டகனின் ஆய்வறிக்கையில் உள்ள தகவல்களை அறிந்த சில மூத்த எம்பிக்கள் பெரும் கவலை தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சியான குடியரசு கட்சி எம்பி டிம் பர்செட் அளித்த பேட்டியில், ‘‘அமெரிக்காவை சுற்றி என்னவோ நடக்கிறது. நம்மால் சமாளிக்க முடியாத ஏதோ ஒன்று நடக்கப் போகிறது நிச்சயமாக தெரிகிறது,’’ என்றார். ஆளும் ஜனநாயக கட்சி எம்பி சீன் பேட்ரிக் மலோனே கூறுகையில், ‘‘வான்வழி மர்மப் பொருள்அமெரிக்க ராணுவத்திற்கும், தேச பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக உள்ளது. விண்வெளி பற்றி நாம் இன்னும் கொஞ்சம் அதிகமாக அறிய வேண்டும் என நினைக்கிறேன்’’ என்றார். இதுபோல் மேலும் சில எம்பிக்கள்  பென்டகன் கண்டுபிடித்துள்ள விஷயங்கள் உலகுக்கே விடுக்கும் எச்சரிக்கையாக இருக்கும் என கூறி உள்ளனர். எனவே, வரும் 25ம் தேதி பென்கடன் வெளியிடப் போகும் ஆய்வு முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
  • ரஷ்யாவின் வேலையா?
    பறக்கும் தட்டு தொழில்நுட்பங்களுக்கு பின்னணியில் ரஷ்யா இருக்குமா? என்ற கேள்விக்கு பதிலளித்த எம்பி டிம் பர்செட், ‘‘இது அபத்தமானது. ரஷ்யாவிடம் பறக்கும் தட்டு தொழில்நுட்பம் இருந்தால், நிச்சயம் அது எங்களுக்கு சொந்தமாகத்தான் இருந்திருக்கும். எனவே, பறக்கும் தட்டு உண்மையாக இருந்தால் அது நம் விண்மீன் மண்டலத்திற்கு வெளியே இருக்க வேண்டும்,’’ என்றார்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *