பால்மாவின் விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை!

இறக்குமதி செய்யப்படும் முழுமைப் பால்மா பெக்கட்டின் சில்லறை விலையை அதிகரிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.

ஒரு கிலோ பால்மாவின் விலையை 350 ரூபாவால் உயர்த்தவும், 400 கிராம் பெக்கெட்டை 140 ரூபாவால் உயர்த்தவும் அனுமதி கோரப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு இலங்கை பால்ம இறக்குமதியாளர்கள் அனுப்பிவைத்துள்ளனர்.

புதிய கொள்வனவுகளை வரவழைப்பதற்கு இந்த விலை அதிகரிப்பு மிக முக்கியமானது என்று இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்த இறுதித் தீர்மானத்தை நுகர்வோர் அதிகார சபை இன்னமும் எடுக்கவில்லையென்று அதன் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *