இஸ்ரேலிய பிரதமர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகாரத்தை இழந்தார்!

இஸ்ரேலில் கடந்த 12 ஆண்டுகளாக பலம் மிக்க தலைவராக விளங்கிவந்த பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு இன்று தனது அதிகாரத்தை இழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நெத்தன்யாகுவின் பதவியை கேள்விக்குட்படுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் புதிய கூட்டணி அரசாங்கத்தினால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
குறித்த வாக்கெடுப்பின் அடிப்படையில் நெத்தன்யாகு பதவி இழந்த நிலையில் நப்தாலி பெனட் புதிய பிரதமராக பதவி ஏற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்றும் அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.