அதானி குழுமத்தின் 43,500 கோடி மதிப்புள்ள கணக்குகள் முடக்கம்!

அதானி குழுமத்தின் 43 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை வைத்துள்ள மூன்று வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன

மொரீசியஸ் தலைநகர் போர்ட் லூயிசில் உள்ள Albula investment fund, Cresta fund, APMS investment fund ஆகியன அதானி குழுமத்தில் உள்ள நான்கு நிறுவனங்களின் பத்து வீதத்திற்கும் குறைவான பங்குகளை வைத்துள்ளன.

அவற்றின் உரிமையாளர் அதனால் பயன் பெறுவோர் உள்ளிட்ட விபரங்களை அளிக்காததாலும் மூன்று நிறுவனங்களும் ஒரே முகவரியில் உள்ளதாலும் தேசிய பங்குகள் வைப்பகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது

இதனால் அந்த மூன்று நிறுவனங்கள் இப்போது வைத்துள்ள பங்குகளை விற்கவோ புதிய பங்குகளை வாங்கவோ முடியாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *