விண்வெளி பயண டிக்கெட் 28 மில்லியன் அமெரிக்க டொலருக்கு விற்பனை!

அமேசான் நிறுவன தலைவர் ஜெஃப் பெஸாஸ் விண்வெளிக்கு பயணிப்பதற்கான டிக்கெட் 28 மில்லியன் அமெரிக்க டொலருக்கு  ஏலத்தில் விற்பனையாகி உள்ளன.

எதிர்வரும் ஜூலை 20ஆம் திகதியன்று பெஸாஸ் மற்றும் அவரது சகோதரருடன் இந்த பயண டிக்கெட்டை ஏலத்தில் வாங்கியுள்ள நபரும் பயணிப்பார் என தெரிகிறது. இன்னும் அவரது பெயர் மற்றும் விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்த பயண டிக்கெட்டுக்கான ஏலம் 4.8 மில்லியன் அமெரிக்க டாலர்களில் ஆரம்பமானது. சுமார் 159 நாடுகளை சேர்ந்த  7000க்கும் அதிகமான மக்கள் இதில் பங்கேற்றுள்ளனர். இறுதியல் 28 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு இந்த பயண டிக்கெட் ஏலத்தில் விற்பனையாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது..

பெஸாஸின் ‘Blue Origin’ நிறுவனம் விண்வெளிக்கு முதல் முறையாக மனிதர்களை அனுப்ப உள்ளது. இந்த பயணத்தில்தான் அவர்கள் பயணிக்க உள்ளனர். Blue Origin நிறுவனத்தின் New Shepard ராக்கெட்டில் அவர்கள் பயணம் மேற்கொள்ள உள்ளனர். இந்த பயணம் வெறும் 11 நிமிடங்கள் தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *