சீனா 6 -வது தலைமுறை போர் விமானத்தை சோதனை செய்துள்ளது!

சீனா ஆறாவது தலைமுறை அதிநவீன போர் ஜெட் விமானத்தை ரகசியமாக சோதனை செய்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க விமானப்படையால் ரகசியமாக உருவாக்கப்பட்ட எஃப் -22 என்ற ஆறாம் தலைமுறை போர் விமானத்தை அந்நாட்டு அரசு சோதனை செய்ததாக தகவல்கள் கசிந்தன.

அந்நிலையில் , அமெரிக்காவுக்கு போட்டியாக, ராணுவத்தை நவீனமாக்கிவரும் சீனா, அமெரிக்காவுக்கு முன்பே தனது 6வது தலைமுறை ஜெட் விமானத்தை களமிறக்க திட்டமிட்டுள்ளது.

மேலும் ,சீனாவின் ஐந்தாம் தலைமுறை விமானங்களாக செங்டு ஜே.20 மற்றும் ஷென்யாங் எஃப்சி 31ஆகியவற்றை விட மேம்பட்ட போர் விமானத்தை உருவாக்கியுள்ள சீனா, இதனை 2022 முதல் 2025 ஆம் ஆண்டுக்குள் களமிறக்க திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு விமானப்படை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *