திமிங்கலத்தின் வாயில் சென்று உயிருடன் திரும்பிய மனிதர்!

அமெரிக்காவில் பிரம்மாண்ட திமிங்கலம் ஒன்று கடலில் லோப்ஸ்டர் இறாலை பிடித்துக் கொண்டிருந்த நபரை விழுங்கி பின் உயிருடன் வெளியே துப்பிய நிகழ்வு பரபரப்பாக பேசப்படுகிறது.

இதன்படி ,மசாசூசெட்ஸ்-ன் கேப் காட் (Cape Cod, Massachusetts) கடலில் மைக்கேல் பக்கார்ட் (Michael Packard) என்ற 56 வயது நபர் கடலுக்குள் 45 அடி ஆழத்தில், ஆக்சிஜன் கருவிகளுடன் லோப்ஸ்டர்களை பிடித்துக் கொண்டிருந்தார்.

இதற்கமைய ,அப்போது திடீரென அவரை அந்த திமிங்கலம் விழுங்கியது. சுறாவால் தாக்கப்பட்டோமா என அவர் நினைத்த வேளையில், தம்மை பிடித்த விலங்கிற்கு பற்கள் இல்லை என்பதை உணர்ந்த அவர் தாம் திமிங்கலத்தின் வாயில் சிக்கிக் கொண்டதை புரிந்து கொண்டார்.

மேலும் ,சுமார் 30முதல் 40 விநாடிகள் கும்மிருட்டில் அவர் திமிங்கலத்தின் வாயில் இருந்த பின், நீருக்கு வெளியே வந்த திமிங்கலம், தலையை அங்கும் இங்கும் அசைத்து அவரை வேகமாக உமிழ்ந்தது. உடலில் சிறிய சிராய்ப்புகளுடன் வந்து விழுந்த அவரை அருகிலிருந்த மீன்படகில் இருந்தவர்கள் மீட்டு முதலுதவி அளித்தனர்.திமிங்கலத்தின் வாயில் சிக்கி உயிருடன் திரும்பி விட்டேன் என்பதை நம்ப முடியவில்லை என அவர் டிவி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.

பக்கார்டின் அனுபவம் உண்மையாகத்தான் இருக்கும் என மசாசூட்ஸ் திமிங்கல கடல் ஆய்வு துறை இயக்குநர் ஜூக் ராபின்ஸ் (Jooke Robbins) தெரிவித்திருக்கிறார்.திமிங்கலங்களுக்கு மிகப்பெரிய வாய் உண்டு என்றாலும், மனிதர்களை விழுங்கும் அளவுக்கு அதன் தொண்டை பெரிது அல்ல எனவும் அவர் அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *