சமையல் எரிவாயு மற்றும் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க கோரிக்கை!

கோதுமை மாவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரை அதற்கான அனுமதி கிடைக்கப்பெறவில்லை என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சமையல் எரிவாயுவின் விலையை 500 ரூபாவினால் அதிகரிப்பதற்காக நுகர்வோர் விவகார அதிகாரசபையிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எனினும் அதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படாததுடன், முன்வைக்கப்பட்டுள்ள விலை நிர்ணயம் தொடர்பில் ஆராய்வதற்காக ஐந்து பேர் அடங்கிய அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவினரால்  ஊடாக உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரிப்பது தொடர்பில் விரிவான ஆராய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *