இந்தியத் திரைப்படங்களில் ‘மாஸ்டர்’ முதலிடம்!

ஒவ்வொரு வருடமும் சிறந்த படங்கள், பிரபலமான படங்கள் உள்ளிட்ட பல பட்டியல்களை ஐஎம்டிபி இணையதளம் வெளியிட்டு வருகிறது.

அதன்படி தற்போது 2021-ம் ஆண்டு, இதுவரை வெளியான இந்தியப் படங்களில் பிரபலமான படங்கள் என்னென்ன என்கிற கணக்கெடுப்பை நடத்தியுள்ளது.

இந்தப் பட்டியலில் திரைப்படங்களோடு, வெப் சீரிஸின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
ஐஎம்டிபி புரோ தளத்தின் தரவுகள், அந்தந்தத் திரைப்படங்களின் பக்கங்கள் எத்தனை முறை இந்தியாவில் இருக்கும் பயனர்களால் பார்க்கப்பட்டுள்ளன ஆகியவற்றைக் கொண்டு இந்தப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

இதில் விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. ‘திரிஷ்யம் 2’ நான்காவது இடத்தையும், ‘கர்ணன்’ 6 வது இடத்தையும் பிடித்துள்ளது.

தமன்னா நடிப்பில் வெளியான ‘நவம்பர் ஸ்டோரி’ வெப் சீரிஸும் இதில் இடம்பெற்றுள்ளது.

2021 (இதுவரை) பிரபலமான திரைப்படங்கள் / வெப் சீரிஸ் முழு பட்டியல்.

1. மாஸ்டர்
2. ஆஸ்பிரன்ட்ஸ் (வெப் சீரிஸ்)
3. தி வைட் டைகர்
4. திரிஷ்யம் 2
5. நவம்பர் ஸ்டோரி
6. கர்ணன்
7. வக்கீல் ஸாப்
8. மஹாராணி (வெப் சீரிஸ்)
9. கிராக்
10. தி கிரேட் இண்டியன் கிச்சன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *